casemanage inner

கொள்ளை நோய் நிலைமைகளை கட்டுப்படுத்தும் போது அவசரமாக நோய்த்தொற்று நுளம்புகளைக் கட்டுப்படுத்தலும் நோயாளர்களிக்கு உரிய கவனிப்புக்களை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளலும் மிக முக்கியமான பணிகளாக காணப்படுகின்றன.

கொள்ளை நோய் நிலைமைகளின் போது பின்வருமாறு செயற்படல் வேண்டும்

  • நோய் சிகிச்கைப் பிரிவுகளுக்கு டெங்கு நோயாளர்களென சந்தேகிக்கப்படும் நோயாளர்கள் ஆகக் கூடுதலாக சமூகமளிப்பதனை இனங் காணல்
  • மாவட்ட, சுகாதார வைத்திய உத்தியோகத்தர் பிரிவுமற்றும் சிறு பிரதேச மட்டத்தில் நோயாளர் மற்றும் காவி பற்றிய தரவுகளைப் பகுப்பாய்வு செய்தல்.
  • தரவுகளினடிப்படையில் கொள்ளை நோய் நிலைமைகளை ஊகித்தல்
  • குடம்பி நிபுணத்துவத் தரவுகளை உரியவாறு பகுப்பாய்வு செய்து காவி அடர்த்தி அதிகரிக்கும் சந்தர்ப்பங்களை இனங் கண்டு நோயாளர்கள் வரும் வரை காத்திருக்காமல் தேவையான காவி ஒழிப்பு நடவடிக்கைகளைச் செயற்படுத்தல்
  • குடம்பி நிபுணத்துவத் தரவுகள் மற்றும் நோயாளர்களது தரவுகள் என்பவற்றுக்கு ஏற்ப அபாயமான பிரதேசங்களை ஊகித்தலும் முன்னரே இனங்காணலும்
  • காவி ஒழிப்புக்கான திட்டங்களை ஆயத்தப்படுத்தல், இலக்குகளைத் தெரிவு செய்தல், செயற்பாடுகளைத் திட்டமிடலும் அதற்குத் தேவையான வசதிகளை வழங்குதலும்
  • செயற்பாடுகளை மேற்பார்வை செய்தலும் முன்னேற்றத்தை மீளாய்வு செய்தலும்