vectorsur

நோய்க்காவி முகாமைத்துவம் இரண்டு பிரதான பணிகளினூடாக இடம் பெறுகிறது. அதாவது

  • நோய்க்காவிக் கண்காணிப்பு
  • நோய்க்காவிக் கட்டுப்பாடு
  1. சுற்றாடலை முகாமை செய்தல்
  2. உயிர்க் கட்டுப்பாட்டு முறைமை
  3. இரசாயனக் கட்டுப்பாட்டு முறைமை
  4. ஒன்றிணைந்த நோய்க்காவிக் கட்டுப்பாட்டு முறைமை
  5. தரப்பினர்களுக்கிடையிலான கூட்டிணைப்பு, மக்கள் பங்களிப்பு) முறையாக நுளம்புகளின் அடர்த்தியினையும் பருவகாலத்தினையும் கணக்கிடலே நோய்க்காவித் கண்காணிப்பு எனப்படும்.

நோய்க்காவிக் கண்காணிப்பின் மூலம்

  1. காலத்துடன் காவியின் அடர்த்தியின் மாற்றத்தினை அவதானிப்பதன் மூலம் நோய் பரவும் அவதானக் காலவீச்சினை முற்கூட்டியே இனங் காண்பதற்கும் அதன் மூலம் கொள்ளை நோய் நிலைமைகளைத் துரிதமாக கட்டுப்படுத்துவதற்கும் வாய்ப்புக் கிடைக்கிறது.
  2. காவிக் கண்காணிப்பு மூலம் நோய்க்காவி பரவும் இடங்கள், நடத்தை முறைமை மற்றும் நோயைப் பரப்புவதற்காக ஒவ்வொரு நுளம்பு இனத்தினதும் பங்களிப்பினை ஆய்வு செய்ய முடியும். இத் தகவல்களைப் பயன்படுத்தி டெங்கு நோய்க் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை நாடு முழுவதும் மிகவும் பயனுள்ள விதத்தில் மேற்கொள்வதற்கான ஆற்றல் காணப்படுகிறது.

காவிக் கண்காணிப்பு நடவடிக்கைகளின் போது டெங்கு ஒழிப்பு அலகானது தேசிய ரீதியாக மலேரியா ஒழிப்பு அலகு, யானைக்கால் நோய் ஒழிப்பு அலகு மற்றும் மருத்துவ ஆராய்ச்சி நிறுவகம் ஆகியவற்றின் ஒத்துழைப்பினைப் பெற்றுக்கொள்கின்றது. தேசிய ரீதியாக செயற்படும் இந் நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி பிரதேச மலேரியா உத்தியோகத்தர்கள், யானைக்கால் நோய் ஒழிப்பு அலகிற்கு இணைப்புச் செய்யப்பட்டுள்ள வைத்திய உத்தியோகத்தர்கள் மற்றும் குடம்பி சம்பந்தமான நிபுணர்கள் ஆகியோரினால் காவிக் கண்காணிப்பு நடவடிக்கைகளைத் திட்டமிடல், நடைமுறைப்படுத்தல், மேற்பார்வை செய்தல், அவதானித்தல் என்பன மாவட்ட மட்டத்தில் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்காக குடம்பி நிபுணர் குழுக்கள் மாவட்ட மட்டத்திலும் சுகாதார வைத்திய உத்தியோகத்தர் பிரிவு மட்டத்திலும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

நோய்க்காவிக் கட்டுப்பாடு

நோய்க்காவிக் கட்டுப்பாட்டு செயற்பாடு சுகாதார வைத்திய உத்தியோகத்தர் பிரிவு மட்டத்தில் இடம்பெறுவதுடன் இதற்காக பிரதேச மலேரியா உத்தியோகத்தர்கள், யானைக்கால் நோய் ஒழிப்பு இயக்கத்தின் பிரதேச வைத்திய உத்தியோகத்தர்கள், குடம்பி நிபுணர்களும் அவர்களது குழுக்களும் சுகாதார வைத்திய உத்தியோகத்தர் அலுவலகத்திற்கு இணைப்புச் செய்யப்பட்ட அலுவலர்களுடன் கூட்டிணைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.

பிரதான செயற்பாடுகள்

  • மாவட்ட மட்டத்திலும் பிரதேச மட்டத்திலும் உத்தியோகத்தர்கள் தமது டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை சிறந்த முறையில் மேற்கொள்வதற்குத் தேவையான தொழிநுட்ப அறிவு, பயிற்சி, உபகரணம், பூச்சிக்கொல்லிகள் மற்றும் நிதி ஒதுக்கீடுகள் என்பன உள்ளிட்ட தேவையான ஏனைய அணைத்து வசதிகளையும் வழங்குதல்.
  • நோய்க்காவி முகாமைத்துவம் பற்றிய வழிகாட்டியைத் தயாரித்தல், விநியோகித்தல் மற்றும் ஏற்புடைய பணிக்குழாத்தினைப் பயிற்றுவித்தல்.
  • டெங்கு நோய்க்காவி ஒழிப்புக்காகப் பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி தொடர்பில் நுளம்பிடத்தில் எதிர்ப்புச் சக்தி காணப்படுகின்றனவா என்பதைக் கண்டறிவதற்காக ஆராய்ச்சிகளை மேற்கொள்ளல்.
  • மாவட்ட மட்ட செயற்பாடுகளை அடிக்கடி மேற்பார்வை செய்தலும் மீளாய்வு செய்தலும்.
  • வாராந்தம் கிடைக்கப்பெறும் குடம்பி நிபுணத்துவத் தரவுகளைப் பகுப்பாய்வு செய்து நுளம்பு அடர்த்தி கூடிய பிரதேசங்கள் தொடர்பில் அபாய எச்சரிக்கையினை மேற்கொள்ளல்.