intersect

ஜனாதிபதி செயலணி அதிஅதிமேதகு ஜனாதிபதி அவர்களின் தலைமையில் தாபிக்கப்பட்டதுடன் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் போது தேசிய ரீதியில், மாகாண ரீதியில், மாவட்ட ரீதியில் மற்றும் பிரதேச ரீதியில் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரதும் பங்கேற்றலைப் பெற்றுக் கொள்ளலே அதன் நோக்கமாகும். இதன் முதலாவது கூட்டம் 1010 மே மாதம் 25ஆம் திகதி ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

உறுப்பினர்கள்

  • சுகாதார அமைச்சு
  • உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சு
  • அரசாங்க நிருவாக அமைச்சு
  • கல்வி அமைச்சு
  • பாதுகாப்பு அமைச்சு மற்றும் சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சு
  • சுற்றாடல் அமைச்சு
  • அனர்த்த முகாமைத்துவ அமைச்சு
  • ஊடகத்துறை அமைச்சு

அமைச்சுக்களின் பொறுப்புக்களும் பணிப்பொறுப்புக்களும்

சுகாதார அமைச்சு

  • டெங்கு நோய் தொடர்பாக சிகிச்சையளிக்கும் துறைகளை சக்தி பெறச் செய்வதன் மூலம் மரண விகிதாரத்தைக் குறைத்தல்.
  • டெங்கு நோய் கொள்ளை நோய் நிலைமையாகப் பரவுவதைத் தடுத்தல்.
  • ஏற்புடைய அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களுடன் ஒருங்கிணைப்புடன் டெங்கு ஒழிப்புக்காக/ தடுப்பதற்காக நடவடிக்கை மேற்கொள்ளல். .

அரசாங்க நிருவாக அமைச்சு 

  • அனைத்து அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் என்பவற்றை நுளம்புகள் பெருகாத விதத்தில் பேணிச் செல்லல்.
  • அமைச்சின் கீழ் உள்ள மாவட்ட, பிரதேச, கிராமிய மட்டத்திலுள்ள கள உத்தியோகத்தர்களை டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளில் முனைப்புடன் ஈடுபடுத்தல். 

கல்வி அமைச்சு

  • அனைத்து அரச மற்றும் தனியார் பாடசாலைகள், பிரிவெனாக்கள், பயிற்சிக் கல்லூரிகள், கல்விக் கல்லூரிகள் ஆகியவற்றை நுளம்புகள் பரவாதவாறு பேணிச் செல்லல். 
  • நுளம்புகள் பரவாத சுற்றாடலைப் பேணிச் செல்வதற்காக பாடசாலை மாணவர்களிடம் நடத்தைசார்ந்த ஒரு மாற்றத்தை ஏற்படுத்தல். 
  • ஏற்புடைய சுகாதார வைத்திய உத்தியோகத்தர் பணிக்குழாத்தின் ஒருங்கிணைப்புடன் பாடசாலையினையும் சுற்றுச் சூழலையும் நுளம்புகள் பரவாதவாறு பேணிச் செல்லல். 
  • பாடசாலை மாணவர்களினூடாக வீடுகளில் நுளம்புகள் பரவாதவாறு வீட்டை அண்மித்த சுற்றுச் சூழலை நுளம்புகள் பரவாதவாறு பேணிச் செல்வதற்கு அறிவுரை வழங்குதலும் வழிநடாத்தலும். 

சுற்றாடல் அமைச்சு 

  • திண்மக் கழிவுப் பொருட்களை உரியவாறு அகற்றுவதற்குத் தேவையான கொள்கைகளைத் தயாரித்தலும் அவற்றை நடைமுறைப்படுத்தலும். 
  • டெங்கு ஒழிப்புக்குரிய முனைப்பான பங்களிப்பினை வழங்குதல். 

உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சு 

  • இலகுவில் உக்கிப் போகாத பொருட்கள் உள்ள்ளிட்ட திண்மக் கழிவுப் பொருட்களை உரியவாறு அகற்றுதல்
  • வடிகான் முறைமையினை சுத்திகரித்தல், சுத்தம் செய்தல் மற்றும் நீர் தேங்கி நிற்காதவாறு பராமரித்தல். 
  • பொது இடங்களை நுளம்புகள் பரவாதவாறு பராமரித்தல். 
  • டெங்கு ஒழிப்புக்காக முனைப்பான பங்களிப்பினை வழங்குதல்
  • சட்ட ஏற்பாடுகளை வலுவடையச் செய்தல்.

பாதுகாப்பு அமைச்சு /சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சு 

  • அமைச்சின் கீழுள்ள அனைத்து முப்படைகளின் தலமையகங்கள், பொலிஸ் நிலையங்கள், விடுதிகள் மற்றும் ஏனைய அனைத்து வளவுகளையும் நுளம்புகள் பரவாதவாறு பேணிச் செல்லல். 
  • டெங்கு நுளம்பு ஒழிப்புச் செயற்பாட்டுக்காக முனைப்பான பங்களிப்பினை வழங்குதல்

ஊடகத்துறை அமைச்சு 

  • டெங்கு நோய் அறிகுறி, சிகச்சை, டெங்கு நோய் ஒழிப்பு என்பன பற்றி சுகாதார அமைச்சின் தொழிநுட்ப ஆலோசனைக்கேற்ப அறிவத்தல்கள் மற்றும் நிகழ்ச்சித்திட்டங்கள் என்பவற்றை இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்கள் மூலம் நிதி அறவீடுகள் ஏதுமின்றி விளம்பரப்படுத்தல்.

அனர்த்த முகாமைத்துவ அமைச்சு 

  • டெங்கு நோய் கொள்ளை நோய் நிலைமையாக பரவிச் செல்கின்ற சந்தர்ப்பங்களில் அதனை ஓர் அனர்த்தமாகக் கருதி அக் கொள்ளை நோய் நிலைமையினைக் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான வளங்களைப் பெற்றுக் கொடுத்தல். 

 

நுளம்பு ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியின் இலக்குகள்

  • பயனுள்ள ஒன்றிணைந்த காவி ஒழிப்புக்கான செயற்பாட்டுத் திட்டங்களைத் தயாரித்தல்.
  • டெங்கு நோயின் தற்போதைய நிலைமை, காவி ஒழிப்பில் காணப்படுகின்ற நிலைமை, மாகாண மற்றும் மாவட்ட மட்டத்தில் டெங்கு ஒழிப்புக்கான திட்டங்களைத் தயாரித்தல், நடைமுறைப்படுத்தல், அந் நடவடிக்கைகளின் முடிவு தொடர்பான மேற்பார்வையும் மீளாய்வும், தேவையான தொழிநுட்ப மற்றும் முகாமைத்துவ ஆற்றலை விருத்தி செய்தல்.
  • டெங்கு ஒழிப்பு நிகழ்ச்சித் திட்டங்களின் போது மாவட்ட மற்றும் பிரதேச ரீதியாக தரப்பினர்களிடையே ஒத்துழைப்பினைப் பெற்றுக்கொள்வதற்காக தேசிய ரீதியாக ஏற்புடைய துறைகளுடனான ஒருங்கிணைப்பினை வலுவடையச் செய்தல்.
  • டெங்கு ஒழிப்பு செயற்பாடுகளின் போது ஏற்படக் கூடிய பிரச்சினைகள் மற்றும் குறைபாடுகள் என்பவற்றுக்கான தீர்வு வழங்கப்படும் போது தேவையான சந்தர்ப்பங்களில் கொள்கை ரீதியான தீர்மானங்களை மேற்கொள்ளல்.
  • டெங்கு ஒழிப்பு நிகழ்ச்சித் திட்டங்கள் மற்றும் கருத்திட்டங்கள் என்பவற்றை நடைமுறைப்படுத்துதல் மற்றும் நடைமுறையிலுள்ள கருத்திட்டங்கள், நிகழ்ச்சித் திட்டங்கள் என்பவற்றின் நிலைமையினை அடிக்கடி மதிப்பீட்டுக்குட்படுத்தி தேவையான திருத்தங்களை மேற்கொள’ளல்.
  • டெங்கு நோய் ஒரு கொள்ளை நோயாக பரவுகின்ற சந்தர்ப்பங்களில் செயற்படுவதற்கான அவசர அனர்த்த செயற்பாட்டுத் திட்டமொன்றைத் தயாரித்தல் மற்றும் அத் திட்டத்தினை அமுல்படுத்தும் போது கிடைக்கின்ற அனுபவங்களைப் பயன்படுத்தி அதனை மேலும் விருத்தி செய்வதன் மூலம் அதன் செயற்றிறனை அதிகரித்தல்.
  • சுகாதாரத் துறை மற்றும் சுகாதாரத் துறையல்லாத துறை என்பவற்றின் கூட்டிணைப்புடன் வெற்றிகரமாக ஒருங்கிணைந்த டெங்கு ஒழிப்பு நிகழ்ச்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்தல்.
  • தரப்பினர்களுக்கிடையிலான கூட்டிணைப்பினைக் கொண்ட மாகாணக் குழுக்கள், மாவட்ட, பிரதேச மற்றும் கிராமிய மட்டத்திலான குழுக்களை அமைத்தல் மற்றும் அவற்றின் மூலம் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை கூட்டிணைப்புச் செய்தல்.

மக்களது பங்களிப்புடன் தடையின்றி டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக கூடுதலான கவனஞ் செலுத்துதல்.

intersectoral Tamil img1

அமைச்சுக்களுக்கிடையிலான ஒருங்கிணைப்பு

intersectoral Tamil img2